பகிர்ந்துகொள்ள முடியுமா? ஆளுக்கு 5 பாயின்ட்கள் சொன்னால் போதும். //
தளம் - மீனவர் வாழ்க்கையை சிறப்பாக சித்தரித்திருப்பது, காலம் - வாழ்க்கை
முறை மாறி வருவதை சிறப்பாக சித்தரித்திருப்பது, நுன்விவரம் - மீன்
பிடிப்பதைப் பற்றி இத்தனை விவரங்கள், சுவாரசியம்
என்னுடைய கருத்தில் நாவலின் பரந்த தளத்தையும் பார்வையையும் கருதுகிறேன்.இது மீனவரின் வாழ்வை அந்த சமூகத்தைச் சார்ந்த ஒருவரே சொல்லும் நாவல்.ஆனால் அந்தத் தளத்திலேயே குறுகிவிடாமல் வாழ்க்கை .மரணம்.மதம்.காமம்,ஒழுக்கம் போன்ற பெரிய கேள்விகள் பற்றியும் பேசுகிறது.
இரண்டாவது பத்திரங்கள் ஒற்றை வார்ப்பாய் நிலைத்துவிடாமல் மாறுவதை முதிர்வதை இயல்பாக விவரித்திருக்கிறார்.யாரும் கருப்பு வெளுப்பு கதாபாத்திரம் இல்லை.ஜஸ்டின் மாறுவதை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார்.ஜஸ்டினின் மரணம் மிகக் கூர்மையாக மிகை வார்த்தை இல்லாமல் சொல்லப் பட்டிருக்கிறது.மீனவர் வாழ்வை மற்றவர் எப்படி பார்க்கிறார்கள் என்ற பார்வையிலும் சொல்லப் பட்டிருக்கிறது.தன் இனத்தின் பேரில் முழுக்க ஒரு சாய்வு நிலையை அவர் எடுத்துவிட வில்லை.
[நாஞ்சில்நாடன் மட்டுமே ஏனோ இந்த விசயத்தில் ஒப்பிடத் தோன்றுகிறது]மதம்..மத மற்றம் பற்றிய மாற்றுப் பார்வைகளையும் அவர் அஞ்சி விலகவில்லை[இந்த விசயத்துக்காக திருச் சபையில் அவர் சில சங்கடங்களுக்கு உட்படுத்தப் பட்டார் என்று படித்தேன்]வாழ்வில் குரூசின் அற நோக்கு என்ன என்பது தெளிவாகவே நாவலில் வெளிப்படுத்தப் படுகிறது ஆனால் அவற்றிலிருந்து முரண் படுபவர்களையும் அவர் வெறுப்புடன் அணுகி தீர்ப்பு எதுவும் நேரிடையாக சொல்வதில்லை.
எங்கே எழுத்தாளன் நாவலில் உள்ளே இறங்கி நெருங்கிவந்து பேசவேண்டும் எங்கே அவனும் ஒரு பார்வையாளன் அல்லது வாசகன் போல விலகிநின்று கதை சொல்லவேண்டும் என்ற வித்தை அவருக்கு இயல்பாகவே கைகூடி இருப்பதாகவே நினைக்கிறேன்
நவம்பர் மாத மரத்துண்டுகள் எடுத்து...
முட்டைகள் சேகரிக்கும் தெலங்கானா காதலி செஞ்சு குனிகிறாள் 'நவம்பர் மாத மரத்துண்டுகள் எடுத்து.' செறிவுமிக்க சே குவாரா விரல்களின் தனிமை இந்தியாவில் பன்னிரண்டு நாட்கள் அவசியமான பயணம் அழகாக மரணமடைவதில் வாழ்க்கை அர்த்தமற்றது மூச்சு நடைதிணறும் ஆஸ்த்மாவில் முன்னாள் வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் மாளிகையில் ரோஜா கொடுத்த மாபெரும் விருந்தில் சே துண்டிக்கப்படாதபோது கைகள் ஏந்துகிற கோப்பைகளில் நக்ஸல் தேயிலை ஆவிகள் கல்கத்தாவின் வறுமை வரைபடம் ஆக்ரா ரோஜா மடிப்புகளில் மறைந்திருக்கும் மரணம் புத்தகமாகி வார்த்தையாகாமல் வெற்றிடத்தில் லம்பாடிப்பெண்கள் நாவலாகும்படி ஒவ்வொரு மரத்துண்டும் எடுத்துச் சுழல்களில் நடனம் கால்தூக்கிய இசைகளின் கோடை வைரத்தில் அருகம்புல் நீரோட்டம் வருத்தும் ஷெனாய் மணம் பிரதி வறண்டு கோப்பைகளாகின்றன சுருள்பட்டு இருட்டும் ஷெனாய் மூச்சுக்குழல் ஈச்ச மரங்கள் அறிந்த கனவுப்புனைகதை உதிர்ந்த பாதிப்பனியிலை அறுவடைசெய்த கோதுமைநிறக்காதல் மேதி பட்டணத்தில் அனாதையாய்க் கிடக்க ஆந்திரப்பழங்குடி சாரங்கிப்பாடல்கள் இசைவிரல்களில் சிவந்த முல்லைநிலம் மரவாசனைகளில் சுழலும் நெருப்பு உள்ளே உயிர்மையின் கோடை கலைந்துசெல்ல கருநீலம் துடைத்த மேகங்களில் கோயா மூதாதைகளின் வெள்ளிவாத்து உப்புப்பானைக்குள் மந்திரிக்கப்பட்ட முட்டைகள் அடியில் தற்கொலை குளிர்காலம்.
-- பிதிரா நாவலிலிருந்து.
0 comments:
Post a Comment