சாகர அலை - இணைப்புகள்
தேன்கூடு கல்யாண் - சாகர அலை - இடுக
Please check the following website for Sakaran’s funeral rites schedule updates .
http://djanakiraman.googlepages.com
thanks
family
(July 22nd 1975 - Feb 11th 2007)
- என் உள்ளத்திலிருந்து: சாகரனின் மரணம்.. ஒரு ஃப்ளாஷ்பேக்... - டி.பி.ஆர்.ஜோசஃப்
- சற்றுமுன்...: சாகரன் உடல் தகனம்
- riyadhtamilsangam : லக்கி ஷாஜஹான்: கல்யாண் - இறுதி அஞ்சலி
- Jahir Hussain.J: ஜ. ஜாஹிர் உசேன்: About Kalyan' words - Vasana Kavithai
- riyadhtamilsangam : மு. முஜிபுர் ரஹ்மான்.: Condolences
- Meerasan A. Ahmed: [Riyadh Tamil Sangam] துக்கச் செய்தி
- இம்தியாஸ்: துக்கச் செய்தி
- Haritha Shanker D/O D.V.Shanker : IX Std., DAV School, Gopalapuram: A homage to Kalyan Uncle
- Dr V Masilamani
Prof. Laser Group, King Saud Univ Riyadh, KSA: kalyan -1 - ஒயாசிஸ் அமைப்பு நிர்வாகிகள்: ஆழ்ந்த அனுதாபங்கள்
- riyadhtamilsangam : லக்கி ஷாஜஹான்: கல்யாணும் கொஞ்சம் கண்ணீர்த்துளிகளும்...: எழுத்துக்கூடத்தின் 21 ஆம் சந்திப்பும் ஒரு இறுதி அஞ்சலியும்
எந்த ஒரு காரியம் அது சின்னதோ,பெரியதோ அதற்கு ஊக்கபடுத்துவதிலும்,உற்சாகப்படுத்தி வரவேற்பதிலும் கல்யாண் is a Great.அவர் மறைந்த நாளின் மறுநாளிலிருந்து அவரைப்பற்றி இணையத்தில் வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பதிவைப் படிக்கையிலும்தான் தெரிகிறது எத்துணை அருமையான ஒரு நபரை நாம் இழந்திருக்கிறோம் என்பது...
- எழுத்துக்கூட கூட்டத்தில் மறைந்த நண்பர் கல்யாணின் அஞ்சலி மற்றும் இரங்கல்கூட்டத்தின் போது சகோதரர் அஹமது இம்தியாஸ்.
*
ஆர்ப்பாட்டமின்றி அமைதியாய் பல சாதனைகள் செய்துகொண்டு அதே சமயம் தன்னுடைய அலுவல் பணியையும் சிறப்பாய் செய்து யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் நம்மைவிட்டு சென்ற நண்பர் - ரியாத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்துக்கூடத்திற்கு வித்திட்ட தமிழ் ஆர்வலன் - ஒன்று விட்ட வெள்ளி தோறும் தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து எழுத்துக்கூடத்தில் சந்திக்க வைத்த சகோதரன் கல்யாண் மறைவை ஒட்டி அவரைப் பற்றிய நினைவு கூர்தலுக்காகவும்,அஞ்சலி செலுத்தலுக்காகவும் எழுத்துக்கூடத்தின் இருபத்தோராம் சந்திப்பான நேற்றைய வெள்ளிக்கிழமை கூட்டம் நிகழ்த்தப்பட்டது.
நேற்றைய மதியம் 1மணி அளவில் நண்பர் கல்யாணின் உடலை வான்வழி சரக்ககம் மூலம் தாயகம் அனுப்பி வைத்துவிட்டு எழுத்துக்கூட கூட்டத்திற்கு வந்த ஐயா வெற்றிவேல் ஐயா ஜெயசீலன் இவர்களுடன் எழுத்துக்கூடம் வழமையாக நடைபெறும் திரு.பாலமுகுந்தன் அவர்கள் இல்லத்தில் பேரா.மாசிலாமணி ஐயா,திரு.இம்தியாஸ்,நண்பர்கள் ராஜா,அறவாழி, திருமாவளவன் ஆகியோர் இந்த எழுத்துக்கூட சந்திப்பை நண்பர் கல்யாணின் இரங்கல் கூட்டத் தீர்மானித்திற்காக அமைப்பதென முடிவு செய்து கூடினோம். வழமையான எழுத்துக்கூட சாரம்சங்கள் அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ரியாத் தமிழ்ச் சங்க வலைத்தளம் வடிவமைக்கப்படுவதில் நண்பர் கே.வி.ராஜாவுடன் இணைந்து செயல்பட்டதில், தமிழ் ஆர்வலர்களை படைப்பாளியாக, நல்ல விமர்சகனாக உருவாக்க ஆர்வம் கொண்டு தற்போதைய எழுத்துக்கூடத்தின் மூல அமைப்பான எழுத்துப்பட்டறையை ஐயா அப்பாஸ் இப்ராஹிமுடன் சேர்ந்து வெற்றிவேல் ஐயாவின் ஆலோசனைப்படி ஏற்படுத்தியவை மட்டுமே ரியாத்தில் வசிக்கும் கணிணி இணைய உபயோகிப்பாளன் அறிவான். அதற்கு அப்பால் சமுத்திர பிரளயமாய் சாகரன் என்ற புனைபெயரில் உலகளாவிய இணைய பயன்பாட்டில் தமிழ் வலைத்தளங்களில் கல்யாண் என்ற கல்யாண ராமனின் பங்களிப்பில் எதை சொல்வது.. எதை விடுவது...?
எழுத்துச்சித்தர் பாலகுமாரனுக்கென்று உருவாக்கிய www.balakumaran.net என்ற தமிழ் வலைத்தளம், www.muthamilmantram.com என்ற தமிழ் வலைத்தளம், எல்லாவற்றிற்கும் மேலாக உலகளாவிய தமிழர்களின் வலைப்பூக்களின் விலாசங்களை ஒருங்கிணைத்துத் தரும் yellow pages பயன்பாட்டைப் போன்ற www.thenkoodu.com என்ற தமிழ் வலைத்திரட்டி உருவாக்கியது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.இதிலும் குறிப்பிடத்தக்க விஷயம் ஒன்று உண்டு.இந்தியாவின் எல்லா மொழியிலும் வலைப்பதிவாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை மனதில் கொண்டு கல்யாண் பிறமொழி வலைதிரட்டி உருவாக்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார்.தெலுங்குப் பயனாளர்களுக்கு அவர் உருவாக்கிய தேனேகூடு என்ற வலைத்திரட்டி கொஞ்சம் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது.அடுத்து கன்னடம் மற்றும் மலையாள வலைத்திரட்டி பற்றிய முயற்சியில் இருந்திருக்கிறார்.குழந்தைகளுக்கென்று எல்லா அம்சங்களுடனும் கூடிய ஒரு வலைமனை உருவாக்குவது என்பதும் கல்யாணின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.
ஒரு நல்ல எழுத்தாளப் படைப்பாளி என்பதை விட நல்ல படிப்பாளியாக,வாசிப்பதில் அதீத ஆர்வமுடையவராகவே இருந்திருக்கிறார்.பல நண்பர்கள் வலைமனை அமைப்பதற்கு இணையத்தில் பதிய தம் கணக்கில் இடம் ஒதுக்கித் தந்திருக்கிறார்.அவருடைய பதிவுகளில் எழுத்துக்களில் ஒரு பூ மலர்வதான மென்மையும் சுக அனுபவமாய் உணரவைக்கும் தன்மையும் இருப்பதாக நெகிழ்ந்தபடி நினைவு கூர்ந்தார் நண்பர் கேவி.ராஜா.
தம்மை வலைப்பூ எழுத ஆர்வப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தன் பதிவுகளை பாராட்டிப் பிற இணைய தளங்களுக்கு அவராகவே முன்வந்து அவற்றை அனுப்பி வைப்பார் என நன்றியோடு நினைவு கூர்ந்தார் திரு.பாலமுகுந்தன்.எழுத்துக்கூடத்தின் சக உறுப்பினர் அஹமது சுபைருக்கும் வலைப்பூ எழுத ஊக்கப்படுத்தியது கல்யாண்தான் என்று ஒருமுறை சொல்லியிருந்ததை நண்பர் ஃபகுருதீன் தம் வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கிறார்.
கல்யாணின் இழப்பு என்பதை இன்னும் நம்பமுடியாததாகவே கருதுவதாக சொன்ன பேரா.மாசிலாமணி ஐயா தாம் எழுத்துக்கூடத்தில் உரையாற்றி வரும் தாக்கத்தை ஏற்படுத்திய தமிழர்கள் என்ற தொடரை புத்தகமாக வெளியேற்று அந்தப் புத்தகத்தை கல்யாண் பெயரில் அர்ப்பணித்து அதில் வரும் தொகையைக் கொண்டு இங்கு ரியாத்தில் கல்யாண் பெயரில் ஒரு புரவல அமைப்பை ஏற்படுத்த கேட்டுக் கொண்டார்.கல்வி மற்றும் சமூக நல காரியங்களுக்கு உதவக்கூடிய வகையில் அந்த தொகைப் பயன்படுத்தப்படும் என்ற அவரின் கருத்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இங்கு இலக்கியப் படைப்புத் தொடர்பாக தரும் பரிசுகளோடு கல்யாண் விருது ஒன்றும் ஏற்படுத்தலாம் என்ற எல்லோருடைய கருத்தும் பரிசீலிக்கப் பட இருக்கிறது.இறையருளால் அடுத்தடுத்த கூட்டங்களில் இதுபற்றி முடிவு எடுக்கப்படும்.
ரியாத்தில் கல்யாணைப் பற்றி அறிந்த அனைவரும் பங்கேற்கும்படி ஒரு இரங்கல் கூட்டம் இன்னும் ஓரிருநாளில் நடத்தப்படும்.அமைப்புகள் ரீதியாக,நண்பர்கள் ரீதியாக,அவரது சகபணியாளர்கள் - அலுவலகப் பெருமக்கள் ரீதியாக அனைவரும் ஒன்று கூடி நடத்த இருக்கும் இக்கூட்டம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெற்றிவேல் ஐயா வெளியிடுவார்கள்.இதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்க கேட்டுக் கொண்டு நிறைவாக இனிய நண்பர்-எழுத்துக்கூட கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மறைந்த சகோதரர் கல்யாணுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
எழுத்துக்கூடம் அமைப்பதில் ஆர்வம் காட்டியது, அதை ஒரு வருடம் ஒருங்கிணைத்து நடத்திச் சென்றது என்பதில் கல்யாண் காட்டிய அக்கறை குறிப்பிடத்தக்கது.ரியாத் தமிழ்ச்சங்கத்தில் இதுவரை உள்ளவர்களும் இனிவர இருப்பவர்களும் இதைக் கவனத்தில் கொண்டு இந்த எழுத்துக்கூட சந்திப்புகள் இடையறாது தொடர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
வாழ்ந்து நிற்றல் என்பது சாகாதிருத்தல் அல்ல, பேர் நிலைக்கச் செய்தல். தாஜ்மஹாலும் தஞ்சை பெரிய கோவிலும் எப்போதெல்லாம் பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் ஷாஜஹானும் ராஜராஜ சோழனும் பேசப்படுகிறார்கள்.அதுதான் பேர்நிற்றல் என்பது. முப்பதுக்கும் நாப்பதுக்கும் நடுவில் சாதித்த தமிழர் பட்டியலை விரல்விட்டு எண்ணி விடலாம்.அந்த எண்ணிக்கைக்குள் ஒன்றாக கல்யாணும் பேசப்பட வேண்டும் -அவரது தமிழ் சேவைகளுக்காக...
ஒரு நல்ல தமிழ் உறவை - உடன் பிறவா சகோதரனை இழந்ததில் வருத்தமுடனும் - கண்ணீருடனும்
லக்கி ஷாஜஹான். - కల్యాణ్ రామన్ జానకీ రామన్ గారికి నా నివాళులు « గుండె చప్పుడు…
- AJeevan: மறைந்தாலும் தெரியும் உன் முகம்
- Jeevan4U by Kanalk (Switzerland): சுவிஸிலிருந்து Jeevan4U வானோலி | AJeevan: சுவிஸிலிருந்து தமிழ் வானோலி Jeevan4U (25.02.2007)
- Subhash - கருவூரான்: சாகரன் இன்னும் வாழ்கிறார்.
- Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: த.வெ.உ புகைப்படப் போட்டி முடிவுகள்
- பிச்சி :: சாகரன் அண்ணாவுக்கு கவியஞ்சலி
- பிரார்த்தனை நேரம்: கல்யாண் அவர்களின் ஆத்ம சாந்திக்கு...பிரார்த்திப்போம்
- வம்பு: நண்பர் சாகரனுக்கு அஞ்சலிகள்
- செல்வராஜ் » Blog Archive » சாகரன்
- nadaipaadhai-sidewalk: சாகரன் - கல்யாண்- அஞ்சலி
- பிஃப்ரவரி 12,2007 « தமிழில் பங்குவணிகம்
- திராவிட தமிழர்கள் வலைத்தளம்: கண்ணீர் அஞ்சலி
- குறிஞ்சிமலர்: சாகர சங்கமம் - எண்ணங்கள்
- நெய்தற்கரை: சாகரசங்கமம்
- My Nose Mookku Sundar :: இறக்கும் இதயம்
- தமிழ் வலைப்பதிவு » சாகரன் கல்யாண்: நினைவுப்பகிர்வு
-மதி
: - தமிழ் வலைப்பதிவு » தேன்கூடு சாகரனுக்கு அஞ்சலி | தமிழ் வலைப்பதிவு » சாகரன் கல்யாண் - an update
- புதுவை கோ.சுகுமாரன்: திரு.சாகரன் அவர்களுக்கு இரங்கல்!
- manaosai, சாகரன் - Sakaran :: Chandravathanaa
- நிறங்கள்: ஒரு மரணமும் சிலகுறிப்புகளும்
- நேசம் விரும்பும்....: இரு (ம)ரணங்கள் :( :( :(: சாகரன் என்ற கல்யாண்....
1975, ஜுலை 22 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரியில் பிறந்தவர். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு சவூதி அரபியாவில் பணியாற்றினார். இணையத்தில் தமிழைப் பரப்புவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்ட பெருமகனார். சென்ற 2007 பிப்ரவரி 11 அன்று காலமானார். - கில்லி - Gilli » கல்யாண் - கண்ணீர் அஞ்சலி | கில்லி - Gilli » Gowrishankar on his friend Kalyan | கில்லி - Gilli » Shocking : “Thenkoodu” Kalyan is No More
- மன்றத்தின் மாமனிதருக்கு வருத்தத்துடன் அஞ்சலி - முத்தமிழ்மன்றம்
- தேன்: தேன்கூடு கல்யாண் | தேன்: சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்
- Makes sense: Young achiever passes away
- Sakaran (a) Kalyan / சாகரன் (எ) கல்யாண் - Tamiloviam (- சிறில் அலெக்ஸ் )
- BalaBlooms: சாகரன் என்கிற கல்யாணின் மறைவு.... | BalaBlooms: கல்யாண் பற்றிய தற்போதைய நிலவரம் (14/2/2007 11:30 IST)
- விடுபட்டவை: சாகரன் நினைவலைகள் | விடுபட்டவை: :-(
- Bad News India - மெத்தனமாக இருக்காதீர்கள்!!: சாகரன் - அஞ்சலி
- சிந்தாநதி : ❒ சாகர கவிதாஞ்சலி
- தமிழ்மணம் அறிவிப்புகள் » ‘தேன்கூடு’ சாகரன் அவர்களுக்கு அஞ்சலி
- சிந்தாநதி : ❒ இதய அஞ்சலி
- பிதற்றல்கள்: 192 : ஆழ்ந்த அனுதாபங்கள்
- Shocking « Prakash’s Chronicle 2.0
- துளசிதளம்: அலை ஓய்ந்தது (-:
- முத்தமிழ்மன்றம்: கண்ணீர் அஞ்சலி!
- முத்தமிழ்மன்றம்: அண்ணன் சாகரனுக்கு அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா
- முத்தமிழ்மன்றம்: மாமனிதரின் புகழ் ஓங்குக - கிரியின் கவியஞ்சலி
- முத்தமிழ்மன்றம்: சாகாவரம் பெற்ற சாகரனுக்கு காவியனின் கவியஞ்சலிகள்
- தண்டோரா - இது கண்டதை சொல்லும் - » கல்யாணுக்கு இதய அஞ்சலி :-(
- இணையத் தொழில்நுட்பக் குறிப்புகள்: தேன்கூடு கல்யாண் மரணம்!!!
- பொன்ஸ் பக்கங்கள்: சாகரனுக்கு அஞ்சலி....
- நாம் - இந்திய மக்கள்: கல்யாண் மறைவிற்கு என் அஞ்சலி!
- எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.: கல்யாண் - சாகரன்
- Surveyசன் -ஆக்கியவன் அல்ல அளப்பவன். Free Surveys!: தேன்கூடு 'சாகரன்' கல்யாண்
- முத்துகுமரன் குடில்: நண்பர் சாகரனுக்கு அஞ்சலி.
- குழலி பக்கங்கள்: சாகரனுக்கு அஞ்சலி
- பரஞ்சோதியின் பக்கம்: மாமனிதர் சாகரனும் நானும்
- Mask of Z - ஜியின் முகமூடி
- எழுத்தோவியங்கள்: கல்யாண் என்றொரு சகோதரன்.
- புள்ளி: சாகரன்
- Thamiraparani Thendral » சாகரன்
- கபீரின் கனிமொழிகள்: நிலையா யாக்கை
- "சாத்தான்"குளத்து வேதம்: சாகரனுக்கு அப்துல் ஜப்பாரின் அஞ்சலி | "சாத்தான்"குளத்து வேதம்: சக பதிவருக்கு அஞ்சலி
- மின்மினி: வலைப்பூ வித்தகன் 'சாகரன்' கல்யாண்
- இனிதமிழ்: ஈடற்ற இழப்பு!!
- ஆத்திகம்: இறுதிப் பரிசு!
- நயனம் - nayanam: கல்யாண் என்ற இனிய மனிதரின் மறைவு!
- TamilnaduTalk.com
- ஓகை: துயர சாகரம்.
- பாரதிய நவீன இளவரசன்: Kalyan O Kalyan!
- தமிழ்த் தென்றல்: சாகரன்கள் இறக்க மாட்டார்கள் ! | கணிமை: சாகரன்கள் இறக்க மாட்டார்கள் - மீள் பதிவு
- Poongaa: பூங்கா - மாமனிதர் சாகரனும் நானும் | பூங்கா - சாகரசங்கமம் | பூங்கா - 12 பிப் 2007 from the desk of the anthologist - தொகுப்பாளரின் மேசையிலிருந்து
- Syed Jaffar Hussain - Oracle blog: Final GOOD BYE to a GOOD FRIEND!
It is good to have a document. But, still not sure of what to write in memory of a faceless friend, who got acquainted by email and remained that way till his end.
We were returning to our van from a visit to the Thiruchanoor temple, to head back to Chennai. While we were searching for our slippers and was thinking about picking a better pair, the storeowner told us that ‘உங்க கூட வந்தவர் மாதிரி இருக்கிற ஒருத்தர், கோவில் வாசலில் திடீரென்று விழுந்துட்டார். அந்த மண்டபத்தில் போட்டிருக்காங்க!’
I wanted it to be somebody else. Not my friend’s relative who has started ahead of us. I 100% believed it would be somebody else. I cannot imagine, somebody well known to us getting into that state of sudden heart attack. I was really confident that it would not be anyone accompanying us. With that callous attitude, I glanced and was shocked to see that it was one from our party.
When Tamiloviam Ganesh Chandra called me to relay the web blogs headlines, I thought it is not Thenkoodu Kalyan. ‘He cannot die. It cannot be him. He will come back with a short email.’
Sakaran will be missed in the Tamil technology industry. Lot of adjectives prop to my mind. Selfless, visionary, true leader, gentle natured, so on. I never got a chance to meet with him.
He was in the frequent emailer list of mine. If I come across some noteworthy or interesting piece of technology, I would have shared it with him. Not many were there in that list. Just him.
He would sincerely reply with his thoughts in a very dignified manner. Being a blogger, I had a natural tendency to project an opinionated arrogance in my few non-consequential sentences. However, his tone in the reply would be subdued, bringing out the applicability of that tech in the Tamil world as well as the implementation considerations.
I would act as a TV reporter. He would turn it into an analyst piece.
I had lengthy list of complaints, masquerading as wish-list, when he kicked off Thenkoodu. If somebody would had given me the same kind of irritating welcome, I would have thought that act as a guile attempt at being stupid and immature with a lack of appreciation for new things. He took a different approach as usual. He welcomed more criticism and nitpicking. I continued.
To appreciate his uniqueness, I have to resort to the comparison of fellow Tamil bloggers.
While many talked about bringing an alternate to the Thamizmanam aggregation service, (nobody with the exception of Mugunth), did anything worthy of notice. With him, there was no empty rhetoric. He simply delivered a much required automatic Tamil Blog reader tool.
I liked Thenkoodu over Thamizhmanam for couple of simple reasons.
I am a linear reader. I am still not yet hooked onto the hyperlinked ADHD presentations. Thenkoodu presented posts in a whole stream of all the blogs on a single page.
It also had simple retrofitting like user ego satisfaction index by listing the most viewed blog posts in a prominent corner. It snubbed 1000, 2000, 3000 countless single letter feedback attention garner artistes to a rightful place.
For a guy who gets puzzled by a Tamil word like ‘ஈச்சமரம்’ it gave an instant English dictionary translation. When you want a synonym for ‘mask’ in Tamil, it was equally handy. Thenkoodu just became a sub-conscious presence.
Going back to the comparison of blogger mentality to Kalyan, he never put himself as the sole soul behind all this nifty creations. Not because of fear of the pointless gun toting warmongers; just because he wanted his actions to speak, instead of some typed up march-past of letter arrays.
Kalyan always had ideas; apart from concepts, he had an execution plan; when things turn awry, he was open to alternate paths; he listened with an open heart; resiliently adopted worthy suggestions.
Kalyan could have easily coordinated the Thenkoodu-Tamiloviam competition all by himself. He was selfless in inviting Tamiloviam to the fold. He designed the poll software, actively distributed the prizes, spread the name of variety of Tamil business vendors. He wanted every Tamil domain to be part of the contest by giving prizes from everybody like chennainetwork.com, NilaCharal.
Sakaran took pains to locate worthy juries and when they regretted about their non-availability, he went on to find even better jurors to be part of the contest.
Running the contest was a tough job. There might be TSCII to Unicode issues, jury might have an emergency, the tsunami would have struck down the internet in their country, the losers might start war against the winners, the winners might start war against themselves. He just moved ahead relentlessly.
Running a web site would have been a much tougher job. There will be tons of hacker attacks, defamation posts, addition/deletion/subtraction requests, restless blogger demands and so on. He went on doing it as though it was his duty without the smallest sign of whimper.
When one lives through hell, not many appreciated his efforts. When he passes away, even I want to be part of the ‘in’ crowd.
I sincerely miss him.
In a virtual world, I wish we can institute an honorary recognition accolade to a worthy cause in Thenkoodu Kalyan’s name. Hope, it becomes a reality and an annual event to a person ‘who did stuff’ in a professional as well as an ethical way to Tamil Blogdom.




Hello world! « சாகர அலை:
சுகம் கொடுத்துத்தான் போய்விட்டது என்று நினைக்கிறேன். 8 மணி நேரம் பஸ் பிரயாணம் ஏற்படுத்தியிருந்த அலுப்பு, மிகுந்த ஆயாசத்தைத் தந்தது. டிசம்பர் 1ம் தேதி. சென்னை விட்டு ஈ.சி.ஆர் ரோடு வழியாக கடலூர் வந்து, கடலூரிலிருந்த்து சீர்காழி வழியாக திருக்கடவூர் சென்றிருந்தேன். ஈ.சி.ஆர் டிராவல் கூட பெரிசாகத் தெரியவில்லை. ஆனால் திருக்கடவூர் வழி செம கடி.
மார்கண்டேயர் கதை தெரிந்திருக்கும். அந்த கதை நடந்த இடம் இதுதான். இந்த இறைதான் காலனை அழித்தவர் என்று அறிந்த போது.. பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தது. அதைவிட அந்த இடம் அபிராமிப்பட்டரால் பாடப்பட்ட அபிராமி அந்தாதியின் இடம் என்று சொல்லிய போது எண்ணம் வலுப்பெற்றே இருந்தது.
மாலை 6 அரை மணி இருக்கும். கோவில் அலாதியாக இருந்தது. ஆங்காங்கே 60 வயசுக்காரர்கள் அந்த மாலை நேரத்திலும் சடங்குகளில் ஈடுபட்டிருந்தார்கள். மார்கண்டேயர் போல காலனை ஒழித்து இன்னமும் பல வருடங்கள் வாழ வேண்டுமென்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது போலும். கோவிலின் மேலே சந்திரன் பிரகாசித்துக்கொண்டிருந்தான். மனசு மாறி மாறி யோசித்துக்கொண்டிருந்தது.
அபிராமி சந்திதியில் நுழையும் போது, இங்குதானே சந்திரனை மீண்டும் தோன்றச்செய்த சக்தி மிகு - தாரமர் கொண்றையும் சன்முக மாலையும் - அபிராமித் தேவி என்று மனசு நினைந்து நினைந்து உருகியது. ஆனாலும் அதிக நேரமில்லை…
ஏன் இந்த காலத்தில் அப்படி ஒரு நிகழ்வு நிகழவில்லை. தெய்வம் இவ்வளவு தூரம் தள்ளிப் போய்விட்டதற்கான காரணம் என்ன? கேள்விகள் மனசை துளைக்கத் துவங்கியிருந்தன. கேள்விகள் வந்துவிட்ட பிறகு எல்லாமே எட்டித்தான்!
திரும்ப வரும் போது கிடைத்தது டவுண் பஸ். இந்த பஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் பஸ்ஸில் நிகழும் சம்பாஷனைகள். அந்த பேருந்திலும் மிகச் சுவாரஸியமான சம்பாசனை ஒன்றை கேட்க நேர்ந்தது.
கேவிஆர் பக்கங்கள்: உன்னை போல் ஒ�
கல்யாண் நினைவாக….. « Prakash’s Chronicle 2.0
This comment has been removed by a blog administrator.
ReplyDeletea fitiing tribute to that great young man.
ReplyDeletegood one. thanks for taking the time to do this.
ReplyDelete