BBC Tamil:
திராய்மடு குடும்பங்களின் அவலம்
மட்டக்களப்பு நகருக்கு வெளியே சுனாமியினால் இருப்பிடங்களை இழந்து, உத்தேச நிரந்தர குடியிருப்பிற்காக திராய்மடு என்னுமிடத்தில் தற்காலிக வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்கள் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி சிரமங்களையும் கஸ்டங்களையும் எதிர் நோக்குகின்றார்கள்.
ஏற்கனவே கடலோரப் பகுதியில் வசித்து வந்த நாவலடி முதல் திருச்செந்தூர் வரையிலான கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்களை திராய்மடு என்னுமிடத்தில் நிரந்தரமாகக் குடியமர்த்த அரசாங்க காணிகள் அடையாளம் காணப்பட்டு, தனித் தனியாக தற்காலிக வீடுகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இதுவரை 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும் கூட்டுறவு, தெரு மின்சாரம், வைத்தியசாலை, போக்குவரத்து உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் இதுவரை அங்கு ஏற்படுத்தப்படவில்லை.
சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 9 மாதங்களாகின்றன; இன்று அந்த மக்களை எமது மட்டக்களப்பு செய்தியாளர் ஆர்.உதயகுமார் சந்தித்து உரையாடிய போது அவர்கள் தமது ஆதங்கங்களையும் உள்ளக் குமுறல்கலையும் வெளிப்படுத்தினார்கள்.
மக்களின் இந்த ஆதங்கம் மற்றும் உள்ளக் குமுறல்களை ஏற்றுக் கொள்ளும் இக் குடியேற்றத்திற்கு பொறுப்பான சிவில் அதிகாரியான மீள் குடியேற்ற திட்ட உதவியாளர் எம.ஜெரோசன்; இந்த உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக உரிய திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுகின்ற போதிலும் அவர்கள் அதனை ஏதோ ஒரு காரணம் கூறி நிறைவேற்ற பின் நிற்பதாகக் கூறினார்.
இதனால் இந்த விடயத்தில் சில நடைமுறைச் சிக்கல்களை பிரதேச செயலக நிர்வாகம் எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Wednesday, September 28, 2005
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment