Wednesday, August 31, 2005

Sujatha on Nirvaana

Welcome to Sakthi Vikatan

சகலமானவர்களுக்கும்...

வணக்கம் இறைவா!


சுஜாதா



‘நிர்வாணம்Õ என்பது என்ன? இன்றைய அன்றாட அர்த்தத்தில் நிர்வாணம் என்பது, உடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டுத் திரிவது. புத்தரின் நிர்வாணமும் ஒருவிதத்தில் களைதல்தான். ஆசைகளை, பற்றுகளை, உடைமைகளை, ஏன்... கடமைகளைக்கூடக் களைந்து அடையும் அந்த நிலை என்ன?

Ôஅந்த நிலையில் பூமி இல்லை. தண்ணீர் இல்லை. நெருப்பு இல்லை. காற்று இல்லை. விண்வெளிக் கோளம் இல்லை. அளவிலாத தன்னிலை உணர்வு இல்லை. பாழ் இல்லை. வருவது இல்லை; போவது இல்லை. நிற்பதும் இல்லை; புறப்படுவது இல்லை. எழுவது இல்லை; தாழ்வது இல்லை. நிலைப்பது இல்லை; செல்வது இல்லை. ஆதாரமும் இல்லை. அதுதான் துன்பத்தின் முடிவு!Õ

|இது ஸர்.ஹம்ப்ஃப்ரே டேவிள் எழுதிய Ôபுத்திஸம்Õ புத்தகத்தில் மேற்கோள் காட்டப்பட்டதன் மொழி பெயர்ப்பு.

இந்த நிலையை அடைவது இருக்கட்டும். முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிர்வாண நிலையை உணர்ந்தவன் புத்தன் ஆகிறான். இது, ஒருவனின் தின வாழ்க்கையின்போதே நிகழலாம். புத்தருக்கு அது நிகழ்ந்தது. புத்தர் அல்லாத நீங்கள் பளிச்சென்று இந்த நிலையை அடைந்தால், இதை உணர்ந்துவிட்டால், உங்கள் கருமங்கள் உங்களைத் தொடராது. இந்த நிலையை அடைந்த பின், நம் உடல் என்ன பாழாய்ப் போனாலும் கவலையே பட வேண்டாம்!

சென்ற இதழில், இரு விளிம்பு நிலைகளைப் பற்றிச் சொன்னேன். மிக அதிகமான ஆசை, சொந்த பந்தம். இது ஒரு விளிம்பு. மற்றது, முற்றும் துறந்து வயிற்றைக் காயப் போட்டு, எக்கித் தவமிருப்பது. சில ரிஷிகளைப் போல புத்தர் இரண்டையும் பார்த்து விட்டு, Ô‘இவற்றுக்கு இடையில் உள்ள நடுச்சாலையில் தான் நிர்வாணத்தை அடையும் வழி கிடைக்கும்!’Õ என்றார். அதற்கு எட்டுச் செயல்கள் சொன்னார்.

புத்தரின் கோட்பாடுகள் அடுத்த ஜென்மத்துக்கு அல்ல. ஓர் ஆத்மா மறுபடியும் பிறக்கும் என்பதை அவர் நம்பவில்லை. இந்து மதக் கருத்துகளுக்கும் பௌத்தக் கருத்துகளுக்கும் முக்கியமான வித்தியாசம் இதுதான்.

புத்தருடைய எண்வழிப் பாதை என்பது என்ன? சரியான பார்வை, சரியான உணர்வு, சரியான பேச்சு, சரியான நடத்தை, சரியான பிழைப்பு, சரியான முயற்சி, சரியான அறிவு, சரியான சமாதி (அல்லது சமநிலை). இதில் பொதுவாக இருக்கும் ÔசரியானÕ என்கிற அடைமொழிகூட துல்லியமான மொழிபெயர்ப்பு இல்லை. ஆங்கிலத்தில் ஸிவீரீலீt என்றுதான் பெரும்பாலும் மொழிபெயர்ப்பதால், அதற்குச் சரியான வார்த்தையாக இதைச் சொன்னோம்.

இந்த எட்டுக் குணங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அடைய வேண்டும் என்றில்லை. மெள்ள மெள்ள ஒவ்வொன்றையும் பல நிலைகளில் முயற்சிக்கலாம். ÔசரியானÕ என்பதை, ÔதவறானÕ என்கிற வார்த்தைக்கு எதிர்மறையாக இங்கு பயன்படுத்துவதில்லை.

உதாரணமாக, சரியான Ôபார்வைÕ என்பது சட்டென்று நமக்குத் தென்படலாம். ஒரு கணத்தில், பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை உயிர்களுக்கும் உள்ள இடைத்தொடர்பை உணரும் போது, சரியான பார்வை தோன்றலாம். இது போல்தான் மற்ற பாதைகளும் இறுதியாக அடைய வேண்டிய குறிக்கோள்கள்.

புத்தர் நிர்வாண நிலை அடைந்தபின், அதை மற்றவர்களுக்கு போதிக்க விரும்பினார். அவருடைய பனாரஸ் பிரசங்கம் பிரசித்தமானது. முதல் ஐந்து சிஷ்யர்கள் மூலம் அவர் கருத்துகள் (இந்துக் கருத்துகளுக்கு மாற்றாக) நாடெங்கும் பரவியது. மெள்ள கிழக்காசிய நாடுகளிலும் பரவியபோது தவிர்க்க முடியாமல் மாறியது. ஹீனயானா, தேரவாதா, ஷிண்டோ, ஜென் என்று பல வடிவங்கள் எடுத்தது. தேரவாதா என்னும் ஹீனயானாவும் மஹாயானாவும் புத்த மதத்தின் இரு பெரும் பிரிவுகள். தேரவாதா முதலில் பாலி மொழியில் எழுதப்பட்டது. இதை Ôத்ரிபீடிகாÕ என்று சொல்வர். Ôமூன்று கூடைÕ என்று அர்த்தமாம்.

புத்தரின் கருத்துகளை மூன்று கூடைக்குள் பிரித்து வைத்திருந்தார்களாம். ஒரு கூடையில், புத்தர் சொன்ன வாசகங்கள். இரண்டாவதில், வாழ்க்கை வழிமுறைகள். மூன்றாவதில், பௌத்தத் தத்துவங்கள்.

மஹாயானா பிரிவுக்கான வாசகங்கள் முதலில் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டு, காலப்போக்கில் அழிந்து போனவையாம். இடையே இது சீனாவுக்குச் சென்று, அங்கிருந்து மறுபடி இந்தியாவுக்கு வந்து சம்ஸ்கிருதத்தில் படியெடுக்கப்பட்டதாம்.

இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மத்தை புத்தர் ஏற்கவில்லை. ‘‘பிறப்பால் ஒருவனைப் பாகுபடுத்துவது தப்பு. ஒழுக்கத்தால்தான் பாகுபடுத்த வேண்டும்!’’ என்றார். ‘‘ஆண்&பெண் வித்தியாசமின்றி யாரும் என்னைத் தொடரலாம்!’’ என்றார். இதனால் அது எளிதாகப் பரவியது.

தேரவாதா (பெரியவர்கள் கருத்து) பௌத்தம், இன்று குறிப்பாக ஸ்ரீலங்காவில் இயங்குகிறது. பர்மா, ஜப்பான், சீனா, திபெத் போன்ற நாடுகளில் இருப்பது மஹாயானா பௌத்தம். இன்று பல வடிவங்களில் இருக்கும் பௌத்த மதம், அதன் பிறப்பிடமான இந்தியாவில் நிலைக்கவில்லை. எட்டாம் நூற்றாண்டு வரை அதற்கு மன்னர்களின் ஆதரவு இருந்தது. ஆதிசங்கரரின் அத்வைதம், சாக்கியம், பதஞ்சலி போன்ற மாற்றுச் சிந்தனைகளின் எதிர்ப்பில் பௌத்தம், மெள்ள அழிந்து போய்விட்டது. இதற்கு முக்கியமான ஒரு காரணம், வலுவான இறைவன் ஒருவன் அதற்கு இல்லாததே!

கி.மு.483|ல் புத்தர் இறந்தபோது, அவர் உடல் எரிக்கப்பட்டதாம். அதன் சாம்பலை மற்ற நகரங்களுக்கு அனுப்பியதாக ஐதீகம். புத்தரின் பல் ஸ்ரீலங்காவில் கண்டியில் மிகவும் ஆராதிக்கப்படுகிறது.

ஏதோ ஒரு விதத்தில் வழிபட, மனிதனுக்கு அடையாளம் தேவைப்படுகிறது. புதைத்த இடம், எரித்த இடம், மறைந்த இடம், பல், செருப்பு... இப்படி ஓர் அடையாள ஸ்தலம் இல்லையென்றால், மனித மனம் தவிக்கிறது.

மெள்ள மெள்ள ஒரு மதத்தின் ஆரம்பக் காரணங்கள் விலகிப் போய், அதன் சடங்குகள் மட்டும் மிச்சமிருக்கும் நிலை, எல்லா மதத்துக்கும் வெவ்வேறு அளவில் உண்டு. பௌத்தம், இந்தியாவில் ஞாபகச் சின்னங்களாகவும் மற்ற நாடுகளில் தொடர்ச்சியற்ற மேம்போக்கான சடங்குகளாகவும் விழாக்களிலும் பிரார்த்தனைகளிலும் இன்று வாழ்கிறது.

அதன் ஆதாரமான சித்தார்த்தனின் ணிஜ்வீstமீஸீtவீணீறீ சிக்ஷீவீsவீs என்பார்களே... Ôஉயிர் வாழ்தலின் கேள்விகள்.Õ பல விதங்களில் இன்றைய அறிவியல் யுகத்தில்கூட அது மறுபடி மறுபடி கேட்கப்படுகிறது.

அடுத்த கட்டுரையில் ஜைனம் பற்றிப் பேசுவோம்...



0 comments: